/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சம்பள சீரமைப்புக்குழுவின் பரிந்துரைகளால் கூட்டுறவு சங்கங்களில் சம்பளம் வழங்க முடியாத அபாயம் வங்கி அனைத்து பணியாளர் சங்க மாநில தலைவர் பேட்டி

ADDED : ஜன 01, 2025 01:20 AM
விருதுநகர்: ''சம்பள சீரமைப்புக்குழு பரிந்துரைகளால் கூட்டுறவு சங்கங்களில் சம்பளம் வழங்க முடியாத அபாயம் ஏற்படும்,'' என, விருதுநகரில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாநில தலைவர் காமராஜ்பாண்டியன் கூறினார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் 4350 கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன.
இவற்றின் சம்பளம், பணி நிலைகள் குறித்து சம்பள சீரமைப்பு குழுவின் பரிந்துரைகளை பின்பற்ற கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதன்படி 2023-2024 ஆண்டு தணிக்கையின்படி சங்கம் நடப்பு லாபத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2018 - 2023 ஆகிய 5 ஆண்டுகள் தான் கடன் நிலுவைக்கான செட்டில்மென்ட் காலகட்டம். 2023 மார்ச் 31 நிலுவையை வைத்து தான் சம்பள உயர்வு போட வேண்டும் என்றும், இந்த 5 ஆண்டு காலங்களில் 2 ஆண்டுகள் நடப்பு லாபத்தில் இருந்தால் போதும் என்றும் விதியுள்ளது.
இந்நிலையில் 5 ஆண்டுகளை கணக்கில் கொள்ளாமல், 6வது ஆண்டை எடுத்து கொண்டு 2024ல் நஷ்டம் என்றால் செட்டில்மென்டே போட முடியாது.
இந்நிலையில் சம்பள உயர்வு கிடையாது என்ற நிலை தான் ஏற்படும். இது நியாயமில்லை.
மேலும் சுற்றறிக்கையில், தவணை தவறிய அனைத்து கடன்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்து சம்பளம் நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றும், 2023-24ம் ஆண்டிற்கு கூட்டுறவு தணிக்கைத்துறையால் தணிக்கை செய்யப்படாமல் இருக்கும் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆடிட்டரிடம் தணிக்கை அறிக்கை பெற்று அதன் அடிப்படையில் 2023 ஏப்.,1 முதல் புதிய சம்பளம் நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தவணை தவறிய கடன்கள் மீது நுாறு சதவீதம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் குறைவே.
2023-2024ல் தணிக்கை அவசியம் என நிர்பந்திப்பது நியாயமல்ல.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் தணிக்கையை முடிக்காமலே உள்ளன. ஆடிட்டர் அறிக்கை பெற ரூ.20 ஆயிரம் செலவு ஏற்படும்.
இந்த சுற்றறிக்கை பணியாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
சம்பளமே வழங்க முடியாத அபாயத்தை ஏற்படுத்தும். இந்த சுற்றிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
சீரமைப்பு குழுவின் பரிந்துரைகளை ஏற்கும் நிலையில் புதிய சம்பள ஒப்பந்தம் போட 100 சங்கங்களுக்கு கூட வாய்ப்பில்லை என்பதால் விரைவில் மாநில சங்கம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம் என்றார்.