/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு கலர் படுக்கை விரிப்பு முறை அறிமுகம்
/
ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு கலர் படுக்கை விரிப்பு முறை அறிமுகம்
ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு கலர் படுக்கை விரிப்பு முறை அறிமுகம்
ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு கலர் படுக்கை விரிப்பு முறை அறிமுகம்
ADDED : அக் 24, 2025 02:25 AM

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு கலரில் படுக்கை விரிப்பு முறை புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மக்கள் நல வாழ்வுத்துறை அறிவிப்பின் படி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருதுத்துவமனையில் வண்ணக் குறியீட்டு படுக்கை விரிப்பு முறை புதிதாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடந்தது.
இதை மருத்துவக் கல்லுாரி டீன் டாக்டர் ஜெயசிங் துவக்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அரவிந்த் பாபு, ஆர்.எம்.ஓ., கோகுல்நாத் பிரேம்சந்த், ஏ.ஆர்.எம்.ஓ., வரதீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
டீன் பேசுகையில், இந்த படுக்கை விரிப்பு முறை மூலம் மருத்துவமனைகளில் தரமானபராமரிப்பும், தினமும் சுகாதாரம், துாய்மை பணி செய்வதும் உறுதிப்படுத்தப்படும்.
ஞாயிற்றுக்கிழமை - இளம் நீலம், திங்கள் - பிங்க், செவ்வாய் - கருநீலம், புதன் - மெரூன், வியாழன் - ஊதா, வெள்ளி - பச்சை, சனி - சிவப்பு என வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி வண்ணப் படுக்கை விரிப்புகள் வழங்கப்படுவதால் தொற்று கட்டுப்பாடு சிறப்பாகச் செய்யப்படும்,என்றார்.

