தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆய்வு செய்யுங்க: சட்டவிரோத பட்டாசு ஆலைகளை கண்காணிக்க வேண்டும்

ஆய்வு செய்யுங்க: சட்டவிரோத பட்டாசு ஆலைகளை கண்காணிக்க வேண்டும்

ஆய்வு செய்யுங்க: சட்டவிரோத பட்டாசு ஆலைகளை கண்காணிக்க வேண்டும்


ADDED : ஆக 01, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2025 01:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார் விருதுநகர், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. தவிர 2000 க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளும் இயங்குகின்றன. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உரிமம் பெற்று வைத்திருக்கும் பட்டாசு கடை அருகே சிலர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் குடியிருப்பு பகுதிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் தகர செட் அமைத்தும், குடோனை வாடகைக்கு எடுத்தும் சட்டவிரோதமாக சிலர் பட்டாசு தயாரிக்கின்றனர். இதுபோன்று சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி களுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகம் என்பதால் தவறு என தெரிந்தும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அரசு நிவாரணம் கிடைப்பதிலும் சிரமம் ஏற்படுகின்றது.

இந்நிலையில் உரிமம் பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும் அதிகாரிகள் ஏதேனும் விதிமீறல் இருந்தால் தற்காலிகமாக ஆலையின் உரிமத்தை ரத்து செய்கின்றனர். ஆனால் அதன் பின்னர் அதிகாரிகள் அந்த ஆலைகளை கண்டு கொள்வதில்லை. இதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள், தங்களது பட்டாசு ஆலையின் முன்புற கேட்டை வெளியில் இருந்து பூட்டி விடு கின்றனர்.

ஆலையின் பின் பகுதியில் வழி ஏற்படுத்தி உள்ளே சட்ட விரோதமாக அதிக ஆட்களை வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது எந்த விதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட ஆலைகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுகிறதா என கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us