ADDED : மார் 29, 2025 06:34 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
மாவட்ட நிர்வாகம் சார்பில் சித்திரை திருநாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர்களுக்கான கபடி, வாலிபால் போட்டிகள் இருபாலருக்கும் மார்ச் 29 முதல் ஏப். 4 வரை நடக்கவுள்ளது.
மார்ச் 29 கபடி, 31ல் வாலிபால் போட்டிகள்அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் செட்டிகுறிச்சி ஸ்ரீசவுடாம்பிகா பொறியியல் கல்லுாரியிலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், விருதுநகரில் மாவட்ட விளையாட்டு அரங்கிலும், நரிக்குடியில் இலுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ராஜபாளையத்தில் தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்துாரில் மங்காபுரம் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.
ஏப். 3 கபடி, 4 வாலிபால் போட்டிகள் சாத்துாரில் எட்வர்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திருச்சுழியில் கல்லுாரணி எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளியிலும், சிவகாசியில் அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லுாரியிலும், வெம்பக்கோட்டையில் பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லுாரியிலும் நடக்கிறது.
வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக வட்டார அளவில் ரூ.10 ஆயிரம், மாவட்ட அளவில்ரூ.1.20 லட்சம் வழங்கப்படும், என்றார்.