ADDED : நவ 27, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சவுடாம்பிகா ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் வேலைவாய்ப்பு ஆணை வழங்கும் விழா நடந்தது.
கல்லுாரி செயலர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். நிர்வாக குழு தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். பொருளாளர் ராஜேந்திரன் மாணவர்களுக்கு நியமன ஆணை வழங்கினார்.
ஆணை பெற்றவர்களுக்கு திருவனந்தபுரம், மும்பை, சென்னை, பெங்களூர், முசவுரி உள்ளிட்ட நட்சத்திர ஓட்டல்களில் வேலைவாய்ப்பு பயிற்சி, ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என முதல்வர் தெரிவித்தார்.
பல்வேறு நிறுவனங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், நிர்வாக குழுவினர், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

