/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயற்கை முறையில் நிறமூட்டப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது டாக்டர்.கோ.செல்வராஜ், மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை, விருதுநகர்.
/
செயற்கை முறையில் நிறமூட்டப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது டாக்டர்.கோ.செல்வராஜ், மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை, விருதுநகர்.
செயற்கை முறையில் நிறமூட்டப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது டாக்டர்.கோ.செல்வராஜ், மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை, விருதுநகர்.
செயற்கை முறையில் நிறமூட்டப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது டாக்டர்.கோ.செல்வராஜ், மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை, விருதுநகர்.
ADDED : பிப் 23, 2024 05:30 AM

l உணவு பாதுகாப்புத்துறை நோக்கம்
உணவு பாதுகாப்புத்துறை மூலம் நுகர்வோருக்கு தரமான, பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த 2006ல் தரங்கள், 2021ல் உணவு பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படத்தப்பட்டது. இதன்படி விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை தர நிர்ணய, பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது.
l கோடை நெருங்க உள்ளதால் அதன் பாதுகாப்பு முறைகள் பற்றி
நமது உடல்நலத்தை பாதுகாப்பாக வைத்திருக்க நாம் உண்ணும் உணவு பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கோடைக் காலம் நெருங்கி வருவதால் உடலுக்கு நீர்ச்சத்து அளிக்கும் உணவை எடுத்து கொள்ள வேண்டும். பழச்சாறு, இளநீர், மோர், பழங்கள் உட்கொள்ள வேண்டும். செயற்கையாக நிறமூட்டப்பட்ட குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் வகைகளை தவிர்ப்பது நல்லது.
l சரிவிகித உணவு எடுத்து கொள்வது எப்படி
நம்முடைய உடல் நலனுக்கு சரிவிகிதமான உணவை உட்கொள்ளும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். தண்ணீர், பழங்கள், காய்கறிகள், பருப்பு, தானிய வகைகளை தகுந்த அளவிலும், மிதமான அளவில் இறைச்சி, மீன் வகைகளையும், அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு உள்ள உணவுப்பொருட்களையும் குறைவாக உட்கொள்ள வேண்டும்.
l டிரான்ஸ் கொழுப்பு பற்றி
சமையல் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் உடலில் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாகிறது. வறுத்த உணவுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நாம் வாங்கும் உணவு பொருள் பொட்டலங்களின் லேபிளில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
l செயற்கை நிறமிகளின் ஆபத்து
இயற்கையாக பழம், காய்கறிகளில் உள்ள நிறமிகள் நம் உடலுக்கு நல்லது. செயற்கை முறையில் நிறமூட்டப்பட்ட குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், கேக் வகைகள், இனிப்பு கார வகைகள், மிட்டாய் வகைகள் என உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடிய உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்.
l லேபிளில் என்னென்ன கவனிக்க வேண்டும்
நாம் வாங்கும் உணவு பொருள் பொட்டலங்களில் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு எண், உணவின் பெயர், உற்பத்தியாளர் பெயர், முழு முகவரி, தயாரித்த தேதி, பயன்படுத்தக்கூடிய, காலாவதி தேதி, ஊட்டச்சத்து விபரம், உணவு சேர்க்கைகளை பற்றிய விபரம், சைவ, அசைவ குறியீடு போன்ற விபரங்களை பார்த்து வாங்க வேண்டும். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பக்கூடாது.
l புகையிலை பொருட்களால் ஏற்படும் கேடு
உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய புகையிலை பொருட்கள் தொடர்பாக போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவற்றை உட்கொள்வதால் மூளை பாதிப்பு, வாய், நுரையீரல், புற்றுநோய், வயிற்றுப்புண், ரத்த நாளங்கள் அடைப்பு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. மாணவர்கள், இளைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
l உணவு வணிகர்கள் உரிமம் பெறுவது பற்றி
உணவு உற்பத்தியாளர்கள், மொத்த, சில்லறை விற்பனையாளர்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், போக்குவரத்து வாகனங்கள், விடுதிகள், டீக்கடைகள், திருமண மண்டபங்கள், குடிநீர் வாகனங்கள், பள்ளி கேன்டீன்கள், அன்னதானம் வழங்கும் வழிபாட்டு தலங்கள் என இலவசமாகவோ, விற்பனைக்கோ உணவு பொருட்களை வழங்க அனைவரும் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
l என்னென்ன செய்யக் கூடாது
உணவு பொருட்களை காகிதங்களிலோ, தடை பிளாஸ்டிக் பொருட்களிலோ பொட்டலமிட்டு தரக்கூடாது. அதிகளவு செயற்கை நிறங்களை சேர்க்க கூடாது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்த கூடாது. தடை புகையிலை, நிக்கோடின் கலந்த உணவு பொருட்கள், வாயில் மெல்லும் பொருட்கள் தயாரிப்பது, இருப்பு வைப்பது, வாகனங்களில் கொண்டு செல்வது போன்றவற்றை கண்டிப்பாக செய்யக் கூடாது.
l புகாருக்கு யாரை அழைக்கலாம்
உணவின் தரம் பற்றிய புகார்களுக்கு 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத்துறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது 04562 252252 என்ற மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
l எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
2023-24ம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உணவில் கலப்படம், தரம் குறைவு சம்மந்தமாக 13 நிறுவனங்களின் மீது கிரிமினல் வழக்குகளும், 20 நிறுவனங்களின் மீது சிவில் வழக்குகளும் தொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததற்காக ரூ.12.15 லட்சம் அபராதமும், தடை பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக ரூ.2.38 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.