/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டின் நடுவே மின்கம்பம் நகர்த்தி ரோடு போட எதிர்பார்ப்பு
/
ரோட்டின் நடுவே மின்கம்பம் நகர்த்தி ரோடு போட எதிர்பார்ப்பு
ரோட்டின் நடுவே மின்கம்பம் நகர்த்தி ரோடு போட எதிர்பார்ப்பு
ரோட்டின் நடுவே மின்கம்பம் நகர்த்தி ரோடு போட எதிர்பார்ப்பு
ADDED : நவ 02, 2024 07:17 AM

சத்திரப்பட்டி: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சமுசிகாபுரம் ஊராட்சியில் நடந்து வரும் ரோடு பணிகளுக்கு முன் ரோட்டின் நடுவே இடையூறாக அமைந்துள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சமுசிகாபுரம் ஊராட்சியில் மாருதி நகர் குடியிருப்பு அமைந்துள்ளது. தற்போது வறுகால் பணிகள் முடிவடைந்து பேவர் பிளாக் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மாருதி நகர் 5வது தெருவில் ரோட்டின் நடுவே மின்கம்பம் குறுகலான சாலையில் வாகனங்கள் இடையூறின்றி திரும்ப முடியாமல் சிக்கல் ஏற்படுத்தி வருகிறது.சாலை பணிகளுக்கு முன்பே மின்கம்பத்தையும் ரோட்டின் ஓரமாக அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து காந்தி, குடியிருப்பாளர்: நீண்ட வருட கோரிக்கைக்கு பின் புதிய ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே குறுகலாக அமைந்துள்ள ரோட்டில் மின்கம்பம் நடுவே உள்ளதால் வாகனங்கள் திரும்ப வழியில்லை. வேறு வழியின்றி ரோட்டில் ஒரு பகுதியில் இறக்கி வைத்து சிறிய வாகனங்களில் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. பேவர் பிளாக் பணி முடிவடைவதற்கு முன் மின்கம்பத்தை மின்வாரியத்தினர் மாற்றி அமைக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை.

