/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தனியார் தொழிற்சாலைகளில் விசாகா கமிட்டி அமைப்பது கட்டாயம்
/
தனியார் தொழிற்சாலைகளில் விசாகா கமிட்டி அமைப்பது கட்டாயம்
தனியார் தொழிற்சாலைகளில் விசாகா கமிட்டி அமைப்பது கட்டாயம்
தனியார் தொழிற்சாலைகளில் விசாகா கமிட்டி அமைப்பது கட்டாயம்
ADDED : அக் 09, 2025 11:58 PM

பணியிடங்களில் இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களை பாதுகாக்கவும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணவும் பணியிடத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013 இயற்றப் பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் அனைத்து பணி இடங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்படுவது கட்டாயம்.
இச்சட்டத்தின்கீழ் வேலை அளிப்பதற்காக வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற தவறும் பட்சத்தில் அந்த வேலை அளிப்பவர் மீது ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப் படும்.
எனவே அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில் வேலை அளிப்பவர்களால் உடனடியாகவிசாகா கமிட்டி அமைக்க வேண்டும். இச்சட்டத்தின் வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
இக்கமிட்டியின் உறுப்பினர்கள் குறித்த விவரங்கள் ,புகார்களுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் ஆகியவற்றை தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடத்தில் அனைத்து பணியாளர்களும் தெளிவாக காணக்கூடிய இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல் சம்பந்தமான பிரச்னை களை கையாள நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நிலையான இயக்க வழிமுறைகளை அரசாணை என் 64, சமூக நலம், மகளிர் உரிமைத்துறை மூலம் அரசு வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டுதல்களை தவறாது கடைபிடிக்க வேண்டும் என அனைத்து வேலை அளிப்பவர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் அனைத்து தொழிற்சாலைகள் , கட்டுமான பணி இடங்களில் வேலை அளிப்பவர்கள் தங்கள் நிறுவனங்களில் உடனடியாக விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்.
ஆனால் மாவட்டத்தில் ஒரு சில பெரிய நிறுவனங்களில் மட்டுமே விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. பெரும்பான்மையான சிறிய நிறுவனங்களில் இதனைக் கண்டு கொள்ளவில்லை.
எனவே இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து இக்கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.