/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விசாகா கமிட்டிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பது அவசியம்; மாவட்ட நிர்வாகம் ஆய்வுகள் நடத்தி உறுதி செய்வதும்

ADDED : ஜூன் 23, 2025 05:48 AM
பணிபுரியும் பெண்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் சந்திக்கும் பாலியல் பிரச்னைகள் குறித்து தைரியமாக தங்களின் புகாரை கொடுத்து தீர்வுகான உருவானதே விசாகா கமிட்டி' மாவட்டத்தில் அரசு துறைகள், மருத்துவமனைகள், பட்டாசு, தீப்பெட்டி, மில்ஸ் உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகள், ஜவுளிக்கடை, தனியார் வணிக நிறுவனங்கள் போன்றவைகளில் பெண்கள் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். பத்து ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் விசாகா கமிட்டி ஏற்படுத்தி செயல்படும் வகையில் கவனிக்க வேண்டியது கட்டாயமாகும்.
இந்த விசாக கமிட்டியின் தலைவராக பெண் அதிகாரியைத்தான் நியமனம் செய்ய வேண்டும். கமிட்டியில் 50 சதவிகிதத்தினர் பெண்களாக இருத்தல் வேண்டும். அதில் ஒரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல் ஏதேனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நபராக இருக்க வேண்டும். இந்நிலையில் செயல்படும் கமிட்டி ஆண்டுதோறும் இதன் செயல்பாடுகளை அரசிற்கு அறிக்கையாக கொடுக்க வேண்டும். இந்நிலையில் மாவட்டத்தில் விசாகா கமிட்டி முழுவீச்சில் செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் பெண்கள் எப்படி பணிபுரிய முடியும். களப்பணியாளர்கள் அனைத்து நிறுவனங்களிலும் முறையாக ஆய்வு செய்து தங்கள் பணிகளை சரிவர செய்கிறார்களா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தினர் அடிக்கடி திடீர் ஆய்வுகள் நடத்த வேண்டும். அனைத்து நிறுவனங்களிலும் விசாக கமிட்டி செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.