/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போக்குவரத்து பணிமனையில் மழைநீர் உட்புகுவதை தடுப்பது அவசியம்
/
போக்குவரத்து பணிமனையில் மழைநீர் உட்புகுவதை தடுப்பது அவசியம்
போக்குவரத்து பணிமனையில் மழைநீர் உட்புகுவதை தடுப்பது அவசியம்
போக்குவரத்து பணிமனையில் மழைநீர் உட்புகுவதை தடுப்பது அவசியம்
ADDED : அக் 16, 2024 05:07 AM
விருதுநகர் விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஆண்டுதோறும் மழை நீர் உட்புகுந்து வருவதால் பஸ்களை உள்ளே நிறுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. இதை தடுக்கவும், தண்ணீரை வெளியேற்றும் மோட்டார்கள், குழாய்கள் வழங்க வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் அரசு போக்கு வரத்து கழகத்தில் மொத்தம் 71 பஸ்கள் உள்ளது. இங்கிருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இப்பணிமனையின் அமைப்பு ரோட்டின் உயரத்தை விட பள்ளமாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் துவங்கிய நாள் முதல் மழை நீர் பணிமனைக்குள் புகுந்து வருவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. கடந்தாண்டு டிச. 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் பணிமனைக்குள் தண்ணீர் உட்புகுந்து பெட்ரோல், டீசல் பம்ப், பஸ்கள் தண்ணீரில் முழ்கியது. இதையடுத்து பஸ்கள் விருதுநகர் பழைய, புது பஸ் ஸ்டாண்ட்களில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் பணிமனையில் மழை நீர் வருவதை தடுக்க எவ்வித தடுப்பு நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.
மேலும் மழை நீரை வெளியேற்றுவதற்கான மோட்டார்கள், குழாய்களை மாவட்ட நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தேங்கும் மழை நீரை வெளியேற்றி பாதிப்பை தடுக்க முடியும் என பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.