/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளிகள் அருகில் தரமற்ற உணவை தடுப்பது அவசியம்; சுகாதாரக் குறைவால் மாணவர்கள் பாதிப்பு
/
பள்ளிகள் அருகில் தரமற்ற உணவை தடுப்பது அவசியம்; சுகாதாரக் குறைவால் மாணவர்கள் பாதிப்பு
பள்ளிகள் அருகில் தரமற்ற உணவை தடுப்பது அவசியம்; சுகாதாரக் குறைவால் மாணவர்கள் பாதிப்பு
பள்ளிகள் அருகில் தரமற்ற உணவை தடுப்பது அவசியம்; சுகாதாரக் குறைவால் மாணவர்கள் பாதிப்பு
ADDED : செப் 05, 2024 04:03 AM
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகள் அருகில் தரமற்ற உணவுப் பொருட்கள்மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள் அருகில் மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் பள்ளியின் வெளியில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களை வாங்கி உண்ணுகின்றனர்.
திறந்தவெளியில் வைத்திருக்கும் சிறு பழங்கள், கொடிக்காய், மாங்காய், கடுக்காய், இலந்தை பழம் போன்றவையோடு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட புளிப்பு மிட்டாய்களையும் விற்பனை செய்கின்றனர்.
இவை ஈ மொய்த்த நிலையில், புழுதி மண் படிந்த நிலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்கி உண்ணும்மாணவர்கள் வயிற்று வலி, காய்ச்சல் தலைவலி ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.
பல வண்ண பொடிகள் போட்டு இனிப்பு பலகாரங்களையும் விற்பனை செய்கின்றனர். பள்ளிகள்அருகில் விற்பனை செய்யப்படும் இது போன்ற உணவுப் பொருட்கள் மலிவான விலைக்கு வாங்கி விற்பனை செய்யப்படுகிறது.
பழங்கள் அழகிய நிலையிலும் நாள்பட்ட நிலையிலும் உள்ளது மேலும் தண்ணீர் பழங்கள் போன்றவற்றை மூடி வைத்து விற்பனை செய்யாமல் திறந்து வைத்து விற்பனை செய்வதால் ஈக்கள் அதில் மொய்த்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
பாக்கெட் குளிர்பானங்கள் விற்பனை செய்கின்றனர். அவற்றில் காலாவதி தேதி அச்சிடப்படுவதில்லை. மேலும் முறையான தயாரிப்பு விவரம் இல்லாத நிலையில் பள்ளிகள் அருகில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் மாணவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி தவிக்கும் நிலை உள்ளது.
எனவே உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பள்ளிகள் அருகில் உள்ள கடைகளை ஆய்வு செய்து காலாவதியான பொருட்கள் இருப்பின் பறிமுதல் செய்ய வேண்டும்.
பள்ளிகள் அருகில் தரமான உணவுகளை மட்டுமே விற்க வேண்டும் என்று உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.