/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் இன்று முதல் ஜமாபந்தி துவக்கம்
/
மாவட்டத்தில் இன்று முதல் ஜமாபந்தி துவக்கம்
ADDED : மே 15, 2025 12:41 AM
விருதுநகர்,; விருதுநகர் மாவட்டத்தில் இன்று(மே 15) முதல் ஜமாபந்தி துவங்குகிறது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.
அவரது செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் 1434ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் எனும் ஜமாபந்தி 2025மே 15 - 16 வரை, மே 20 - 22 வரை, மே 27- 28 வரை தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது.
சிவகாசி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர்தலைமையில் மே 15, 16, 17, 21, 22 ஆகிய 5 நாட்களும், விருதுநகர் தாசில்தார் அலுவலகத்தில்டி.ஆர்.ஓ., தலைமையில் மே 15, 16, 20, 23, 27 ஆகிய 7 நாட்களும், ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் சிவகாசி சப் கலெக்டர் தலைமையில் மே 15, 16, 20 - 22 ஆகிய 5 நாட்கள், சாத்துார் தாசில்தார் அலுவலகத்தில்ஆர்.டி.ஓ., தலைமையில்மே 15, 16, 20 - 22 ஆகிய 5 நாட்கள், அருப்புக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையில் மே 15, 16, 20-23, 27 ஆகிய 7 நாட்கள், காரியாபட்டி தாசில்தார் அலுவலகத்தில்மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையில் மே 15, 16, 20 - 23 ஆகிய 6 நாட்கள், வெம்பக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தலைமையில் மே 15, 16, 20 - 22 ஆகிய 5 நாட்கள், திருச்சுழி தாசில்தார் அலுவலகத்தில் கலால் உதவி ஆணையர் தலைமையில் மே 15, 16, 20 - 23, 27, 28 ஆகிய 8 நாட்கள், ஸ்ரீவில்லிபுத்துார் தாசில்தார் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட துணை கலெக்டர் தலைமையில் மே 15, 16, 20 ஆகிய 3 நாட்கள், வத்திராயிருப்பு தாசில்தார் அலுவலகத்தில் தாட்கோ மாவட்ட மேலாளர் தலைமையில், மே 15, 16, 20 ஆகிய 3 நாட்களும் நடக்க உள்ளது.
கிராம நில உடைமைதாரர்கள் நிலப்பதிவு சம்பந்தப்பட்ட மனுக்கள்,பட்டா மாறுதல், நில ஒப்படை, நில நிர்வாகம், வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் பொதுமக்கள் நேரில் அளித்து பயன்பெறலாம், என்றார்.