/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மத்திய ரிசர்வ் போலீஸ் வீட்டில் நகை திருட்டு
/
மத்திய ரிசர்வ் போலீஸ் வீட்டில் நகை திருட்டு
ADDED : ஆக 11, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மத்திய ரிசர்வ் போலீஸ் வீட்டில் 2 பவுன் செயின் திருடு போனதை போலீசார் விசாரிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே ஆலடிபட்டியை சேர்ந்தவர் குமார் 40, இவர் மத்திய ரிசர்வ் போலீசாக உள்ளார். இவருக்கு அருப்புக்கோட்டை ஜெயராம் நகரில் வீடு உள்ளது. இங்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் அதிலிருந்த 2 பவுன் செயின், வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது. அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
--