/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இணை இயக்குனர் பணியிடம் கூடுதல் பொறுப்பில் நான்கு மாதங்களாக' ; மழைக்காலத்தை சமாளிக்க தேவை நிரந்தர அதிகாரி
/
இணை இயக்குனர் பணியிடம் கூடுதல் பொறுப்பில் நான்கு மாதங்களாக' ; மழைக்காலத்தை சமாளிக்க தேவை நிரந்தர அதிகாரி
இணை இயக்குனர் பணியிடம் கூடுதல் பொறுப்பில் நான்கு மாதங்களாக' ; மழைக்காலத்தை சமாளிக்க தேவை நிரந்தர அதிகாரி
இணை இயக்குனர் பணியிடம் கூடுதல் பொறுப்பில் நான்கு மாதங்களாக' ; மழைக்காலத்தை சமாளிக்க தேவை நிரந்தர அதிகாரி
ADDED : அக் 26, 2025 06:56 AM
மாவட்டத்தில் வேளாண் இணை இயக்குனராக பணிபுரிந்த விஜயா, ஜூன் 30ல் ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு 2 மாதங்கள் முன்னாள் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் கூடுதல் பொறுப்பு வகித்தார். அவருக்கு பிறகு தற்போது வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டங்கள் சுமதி கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
மழைக்கால பயிர் பாதிப்புகளை பார்வையிடவும், அடுத்தடுத்து இழப்பீடு, கண்மாய் மதகு உடைப்பு தொடர்பாக நீர்வளத்துறையினர், ஊரக உள்ளாட்சி துறையினரை ஒருங்கிணைக்கவும் நிரந்தர இணை இயக்குனர் அவசியம்.
இதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவர். அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் செவிசாய்க்கப்படும். நான்கு மாதங்களாக கூடுதல் பொறுப்பில் இருப்பதால் பெரிய அளவில் வேளாண் திட்ட செயல்பாடுகள் இல்லை. 3 குறைதீர் கூட்டங்களும் பெயரளவிலே நடந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நிரந்தர தீர்வு காணவும், கண்மாய்கள், நீர்நிலைகளின் மீட்பது குறித்த கோரிக்கைகள் மீது எந்த தீர்வும் எடுக்கப்படாமலும் இழுபறியோடு நடப்பதாக கூறுகின்றனர். அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். இருப்பினும், தென் மாவட்டங்களிலும் கூடுதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. இந்நிலையில் இங்கு 'ரெகுலர்' இணை இயக்குனர் இருக்கும் போது அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்க ஏதுவாக இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி விஜயமுருகன் கூறியதாவது: உடனடியாக இணை இயக்குனர் பதவியை நிரப்ப வேண்டும். கூடுதல் பொறுப்பு என்றால் எல்லா விஷயங்களிலும் தட்டி கழிப்பர். நிரந்தர அதிகாரிகள் இருந்தால் தீர்வு கிடைக்கும். மானாவாரி பயிர் விவசாய பகுதியாகவும், கரிசல் மண் பூமியாகவும் இருப்பதால் சாகுபடி அதிகம் உள்ளது. மழையை கருத்தில் கொண்டு விரைவில் நிரந்தர இணை இயக்குனரை நியமிக்க வேண்டும், என்றார்.

