/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் ஜோஸ் ஆலுக்காஸின் புதிய ஜூவல்லரி ஷோரூம் திறப்பு
/
சிவகாசியில் ஜோஸ் ஆலுக்காஸின் புதிய ஜூவல்லரி ஷோரூம் திறப்பு
சிவகாசியில் ஜோஸ் ஆலுக்காஸின் புதிய ஜூவல்லரி ஷோரூம் திறப்பு
சிவகாசியில் ஜோஸ் ஆலுக்காஸின் புதிய ஜூவல்லரி ஷோரூம் திறப்பு
ADDED : ஆக 04, 2025 12:34 AM

சிவகாசி; தென்னிந்தியாவில் புகழ் பெற்ற ஜூவல்லரி பிராண்ட்களில் ஒன்றான ஜோஸ் ஆலுக்காஸின் சிவகாசி புதிய ஜூவல்லரி ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
அசோகன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா குத்துவிளக்கு ஏற்றினர்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய நகைகளின் கலெக் ஷன்களை பார்வையிட்டார். நிர்வாக இயக்குனர்கள் வர்கீஸ் ஆலுக்காஸ், பால் ஜே ஆலுக்காஸ், ஜான் ஆலுக்காஸ் பங்கேற்றனர்.
ஜூவல்லரி நிர்வாக இயக்குனர்கள் கூறியதாவது:
ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இலவச தங்க நாணயம் வழங்கப்படும். வைர நகைகளுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடியும், பிளாட்டினம் நகைகளுக்கான சேதார கட்டணத்தில் 15 சதவீதம் தள்ளுபடியும் அளிக்கப்படும். வெள்ளி நகைகளுக்கு சேதார கட்டணம் இல்லை.
வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்தும் விதம் பழைய தங்க நகைகளுக்கு பதிலாக எச்.யு.ஐ.டி., ஹால்மார்க் நகைகளை எளிதாக மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
இது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பையும், நம்பிக்கையையும் உறுதி செய்கிறது. இந்த திறப்பு விழாவை இன்னும் சிறப்பாக்கும் வகையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் வாங்கும் பொருட்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன என்றனர்.