/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் வைகோ கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
/
சாத்துார் வைகோ கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
சாத்துார் வைகோ கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
சாத்துார் வைகோ கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
ADDED : ஜூலை 10, 2025 08:26 AM

சாத்துார் : சாத்துாரில் நேற்று நடந்த ம.தி.மு.க., நெல்லை மண்டல செயல் வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலர் வைகோ பேசிக் கொண்டிருந்தபோது காலியான சேர்களை சில பத்திரிகையாளர்கள் வீடியோ எடுத்தனர். இதற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேடையில் இருந்த வைகோவும் அவர்கள் கேமராவை வாங்கி படங்களை அழியுங்கள் என்றார்.
கேமராவை தர மறுக்கவே வைகோ மைக்கில் 'மீடியா பெர்சன் கெட் அவுட்'என்றார். பத்திரிக்கையாளர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது
திடீரென ஒரு கும்பல் அவர்களை எட்டி உதைத்து தாக்கியது. இதில் ஒருவருக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டது.
மற்றும் சிலர் படியிலிருந்து உருட்டி விடப்பட்டனர்.அப்போது வைகோ மைக்கில் அவர்களை தாக்க வேண்டாம் என்று கூறினார்.மேலும் நாளை காலையில் எல்லா ஊடகங்களும் 'வைகோ பேசிக் கொண்டிருக்கும்போது கட்சிக்காரர்கள் சாப்பிட கிளம்பி விட்டார்கள். சேர்கள் காலியாக இருந்தது' என்று படத்துடன் செய்தி போடுவார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயந்தவர்கள் கிடையாது என்றார்.
எங்களைப் பற்றி அவதுாறு செய்தி பரப்புவதே ஊடகங்களின் வேலையாகி விட்டது என்றும் கூறினார்.
தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் டி.எஸ்.பி. நாகராஜனை சந்தித்து முறையிட்டனர்.அங்கு எம்.எல்.ஏ., ரகுராமன் வந்து சமரசம் பேசியதை ஏற்கவில்லை.
இதன் பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். போலீசார் விசாரித்தனர்.