/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்துாரில் நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்துாரில் நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 15, 2025 12:41 AM
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் நீதித்துறை ஊழியர்கள்சங்கத்தின் சார்பில், கன்னியாகுமரி மாவட்டம்குழித்துறை நீதிமன்ற ஊழியர் நாகராஜன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரியும், நீதித்துறை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உரிய நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி, மாவட்டத்தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் திருப்பதி, மாநில துணைத்தலைவர் பால்ராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, கிளைத்தலைவர் பொன்ராஜ் பேசினர். பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.