/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலசலிங்கம் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
கலசலிங்கம் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : அக் 31, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:  கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பார்மசி கல்லுாரி, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை சார்பில் முன் மருத்துவ மதிப்பீடு மற்றும் மருந்துகள் ஆய்வுகளில் கூட்டு பணிகளுக்கு புரிந்துணர்வு  ஒப்பந்தம் செய்தனர்.
ஒப்பந்தத்தில் முதல்வர் வெங்கடேசன், வேளாண்மை பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் வேளாண்மை பல்கலை டீன் ரவிராஜ்,  உணவு தர ஆய்வக மேனேஜர் கார்த்திகேயன் சுப்புராம்,  ஊட்டச்சத்து துணைத்தலை மேனேஜர் வீரணன் அருண்கிரிதரி பங்கேற்றனர்.
வேந்தர் ஸ்ரீதரன்  வாழ்த்து தெரிவித்தார்.  ஏற்பாடுகளை பேராசிரியர் சந்தனகுமார் செய்திருந்தார்.

