ADDED : ஜன 30, 2025 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்; கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை துணை தலைவர் சசி ஆனந்த் கூறியதாவது:
கியூ.எஸ். ஐ. கேச் இந்திய பல்கலைகள் தரவரிசை 2025ன்படி கலசலிங்கம் பல்கலை பிளாட்டினம் பிரிவில் உள்ளது. இந்தியாவில் பிளாட்டினம் மதிப்பீடு பெற்ற ஐந்து பல்கலைகளில் ஒன்றாக திகழ்கிறது. இங்கிலாந்தின் டைம்ஸ் உயர் கல்வி வெளியிட்டுள்ள உலக பாடத் தரவரிசை 2025ல் கணினி அறிவியலில் 501-600, கணினி அறிவியல் பொறியலுக்கு 601-800, இயற்பியலுக்கு 501-600 பேண்ட் என்ற தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.