/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் சிலை அமைக்க வேண்டும்
/
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் சிலை அமைக்க வேண்டும்
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் சிலை அமைக்க வேண்டும்
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் சிலை அமைக்க வேண்டும்
ADDED : ஜூலை 29, 2025 12:21 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் சிலை அமைக்க வேண்டும் ,என நடிகர் சரத்குமார் பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரம் சிவந்திபட்டி இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பள்ளி வளாகத்தில் காமராஜர், சவுந்தரபாண்டியனார் சிலை திறப்பு விழா நடந்தது.
சிலைகளை திறந்து வைத்து சரத்குமார் பேசியதாவது: நாடார் சமுதாயத்திற்கு எதிரிகள் கிடையாது. அனைவரையும் சமத்துவமாக பார்ப்பவர்கள். இன்றைய சந்ததியினர் காமராஜரின் புகழை போற்றி புகழ வேண்டும். தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் சிலையை அரசு அமைக்க வேண்டும்.
இந்த பள்ளி கட்டடம் கட்ட எம்.ஜி.ஆர். சுமைதாங்கி எனும் நாடகத்தை நடத்தி அதன் மூலம் கிடைத்த பணத்தை இந்த பள்ளிகளுக்கு வழங்கி உதவி செய்துள்ளார். நான் விரும்பும் ஒரு தலைவர் எம்.ஜி.ஆர். தான்.
இளைஞர்கள் போதைக்கு அடிமையாக கூடாது. இறைவன் படைப்பில் அனைவரும் ஒன்று. அனைவருக்கும் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். வாழ்க்கையில் முன்னேற உங்களை நீங்களே அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ், சிவகாசி எம்.எல்.ஏ., அசோகன், மேயர் சங்கீதா இன்பம், தங்க மாங்கனி நெல்லை மாவட்ட நாடார் மகாஜன சங்க செயலாளர் மகாலிங்கம், இணைச் செயலாளர் விவேகானந்தன் ,விருதுநகர் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், அறிவு ஒளி ஆண்டவர், சுந்தர், செங்குளம் கணேசன், விவேகானந்தன் ,செல்லமுத்து, திலகபாமா, மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.