
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையுடன் சிறப்பு பூஜை நடந்தது.
வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், திருமஞ்சனம், இளநீர், சந்தனம், மஞ்சள், அரிசி மாவு, தேன், பஞ்சாமிர்தம், விபூதி உட்பட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
யாக சாலையில் வைக்கப்பட்ட கலசத்துடன் சுப்பிரமணிய சுவாமிக்கு கலசாபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, லட்ச தீபாராதனை கட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.