தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கண்மாய் சீரமைப்பு பணி துவக்கம்

 கண்மாய் சீரமைப்பு பணி துவக்கம்

 கண்மாய் சீரமைப்பு பணி துவக்கம்


ADDED : மார் 09, 2026 07:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 07:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பெரிய கண்மாயை சீரமைக்கும் பணி, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

அருப்புக்கோட்டை நகரில் உள்ள பெரிய கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாய தாமரைகள் சீமை கருவேல மரங்கள் ஆகியவற்றை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிக்காக ரூ.20 லட்சம் நிதியில் சீரமைக்கும் பணியினை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

அருப்புக்கோட்டை - விருதுநகர் ரோட்டில் ரூ.ஒரு கோடி 48 லட்சம் நிதியில் கட்டப்பட்டுள்ள நகராட்சி எரிவாயு தகன மேடை கட்டடம், வெள்ளக்கோட்டை பகுதியில் ரூ.17.50 லட்சம் நிதியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், ஜோதிபுரம் பகுதியில் உள்ள ரூ.15 லட்சம் நிதியில் ரோடு, வெங்கடேஸ்வரா நகரில் ரூ.33 லட்சத்தில் பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்தார்.

முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், நகராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி, நகர செயலாளர் மணி கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us