/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தமிழ்பாடியில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து
/
தமிழ்பாடியில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து
தமிழ்பாடியில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து
தமிழ்பாடியில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து
ADDED : ஜூன் 24, 2024 01:34 AM
திருச்சுழி : விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தமிழ்பாடி மந்தகுமாரசாமி கோயில் பொங்கல் விழாவை ஒட்டி ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கிடா கறி விருந்து நடந்தது.தமிழ்பாடி மந்தகுமாரசாமி கோயிலில் பொங்கல் திருவிழா நடந்தது.சாமிக்கு பொங்கல் வைத்து பொதுமக்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்யப்பட்டப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 150 க்கு மேற்பட்ட கிடாய்கள் மந்தகுமாரசாமிக்கு பலியிடப்பட்டது.பின்னர் கறி விருந்து அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இதில் பெண்களுக்கு அனுமதி இல்லை வயதான பெண்கள், குழந்தைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அன்னதான நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டும் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கறி விருந்து சாப்பிட்டனர். விருந்தில் கலந்து கொள்ளும் எவரும் மது அருந்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.-