ADDED : மார் 01, 2026 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி ஆவியூரில் முதல்வர் ஸ்டாலின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு, தி.மு.க., வினர் சார்பில் கிடா முட்டு போட்டி நடந்தது.
சிவகங்கை, மதுரை, ஆவியூர், விருதுநகர், நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 80 கிடாய்கள் வந்தன. 40 ஜோடிகளாக களத்தில் மோத விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த கிடாய்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக முட்டின. வெற்றி பெற்ற கிடாய் உரிமையாளர்களுக்கு சைக்கிள், டிரெஸ்சிங் டேபிள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

