தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கே.எம்.சி.எச்.,ல் கர்ப்பப்பை பரிசோதனை ஜன.31 வரை முகாமில் கட்டண சலுகை

கே.எம்.சி.எச்.,ல் கர்ப்பப்பை பரிசோதனை ஜன.31 வரை முகாமில் கட்டண சலுகை

கே.எம்.சி.எச்.,ல் கர்ப்பப்பை பரிசோதனை ஜன.31 வரை முகாமில் கட்டண சலுகை


ADDED : ஜன 10, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 06:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்ப்பப்பை வாய் புற்று நோய் என்பது இந்தியப் பெண்களிடையே காணப்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் 'ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ்'(எச்.பி.வி.,) என்ற வைரஸ் மூலம் ஏற்படுகிறது.

சுமார் 80-90 சதவீதம் பெண்களுக்கு எச்.பி.வி., வைரஸ் தொற்று ஏற்படலாம். 10-15 சதவீதம் பெண்களுக்கு இது புற்று நோயாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது என்கிறார் டாக்டர் அன்புக்கனி சுப்பையன்.

அவர் மேலும் கூறியதாவது:

இந்த வைரஸ் தொற்றுக்கு எந்த அறிகுறியும் கிடையாது. பரிசோதனை மட்டும்தான் தொற்றை கண்டறிய உதவும். தகுந்த சிகிச்சை மூலம் வைரஸ் தொற்றை குணப்படுத்தி புற்றுநோயை தடுக்கலாம். அதிநவீன எச்.பி.வி., பரிசோதனையில் 'செல்'லை நேரடியாக பகுப்பாய்வு செய்து அதில் எச்.பி.வி., வைரஸ் உள்ளதா என

கண்டறியப்படுகிறது.

இப்பரிசோதனையின் துல்லியத்தன்மை அதிகம். எச்.பி.வி., தடுப்பூசி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. அவிநாசி ரோடு, கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் வரும் 31ம் தேதி வரை நடக்கும் முகாமில் கர்ப்பப்பை வாய் பரிசோதனையானது சலுகை கட்டணத்தில் செய்யப்படுகிறது.

கர்ப்பப்பை வாய் புற்று நோய் சிகிச்சை நிபுணரின் ஆலோசனை இலவசம். எச்.பி.வி., தடுப்பூசிகளை குறைந்த கட்டணத்தில் பெறலாம். 25 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம். சீரற்ற மாதவிடாய் ரத்தப்போக்கு, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு, காரணம் தெரியாத எடை இழப்பு, அடிவயிற்றில் தொடர்ந்து வலி, தாம்பத்ய உறவுக்கு பின் ரத்தப்போக்கு, பிறப்புறுப்பில் துர்நாற்றத்துடன் திரவம் அல்லது வெள்ளைப்படுதல், காரணம் தெரியாத பசியின்மை, மாதவிடாய் காலங்களுக்கு இடையே தொடர்ந்து ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

கே.எம்.சி.எச்., மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில்,''பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இம்மாதிரியான முகாமை கே.எம். சி.எச்., மருத்துவமனை தொடர்ந்து நடத்திவருகிறது,'' என்றார்.

மேலும் விபரங்களுக்கும், பரிசோதனைக்கான முன்பதிவிற்கும், 74188 87411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us