ADDED : ஏப் 16, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
திருச்சுழி:அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி முத்தரையர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 25, டிரைவர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆண்டி குடும்பத்தாருக்கும் முன் விரோதம் இருந்தது. செம்பட்டியை சேர்ந்த கார்த்திக்,20, திருச்சுழி அருகே குலசேகரநல்லூரில் தோட்டத்தில் பழுதான ஆட்டோவை சரி செய்ய வருமாறு கிருஷ்ணமூர்த்தி டூவீலரில் அழைத்துச் சென்றார்.
அங்கு காத்திருந்த ஆண்டியின் மகன்கள் சத்தியமூர்த்தி, 19, வேலு,20, இவர்களின் நண்பர் ஹரிஹரன், 20, மற்றும் கார்த்திக்கும் உடன் சேர்ந்து அவரை கத்தியால் குத்தியும் கம்பியால் தாக்கி ஓடி விட்டனர். காயமடைந்த அவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருச்சுழி போலீசார் சத்தியமூர்த்தி , ஹரிஹரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
____
