/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி
/
ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED : செப் 16, 2025 03:51 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுவாமிகள் வீதியுலா, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகள் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று முன் தினம் காலை ஆண்டாள் கோயிலில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ணர் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து கோயிலுக்கு திரும்பினார். அப்போது சுதர்சன் பட்டர் ஸ்ரீ ஜெயந்தி புராணம் வாசித்தார். இதனையடுத்து நேற்று இரவு 12:05 மணிக்கு கிருஷ்ணர் பிறப்பு வைபவம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
நேற்று இரவு 7:00 மணிக்கு மேல் ஆண்டாள், ரெங்க மன்னார், பெரிய பெருமாள், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தனர். அப்போது உறியடி உற்ஸவம் மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா, செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.