தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குல்லுார்சந்தை தரைப்பாலம் சேதம்

குல்லுார்சந்தை தரைப்பாலம் சேதம்

குல்லுார்சந்தை தரைப்பாலம் சேதம்


ADDED : பிப் 26, 2024 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 01:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகர் குல்லுார்சந்தை அணை நீர்வழித்தடத்தில் அமைந்துள்ள தரைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீரமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 2023 டிச. 18, 19 ஆகிய இரு நாட்களில் பெய்த அதீத கனமழை காரணமாக பரவலாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பின. இதே போல் குல்லுார்சந்தை அணையும் நிரம்பியது. அதன் பிறகு ஒரு மாதம் வரை மறுகால் பாய்ந்தது.

இந்நிலையில் இதற்கு சில மாதங்கள் முன்பே விருதுநகர் கூரைக்குண்டில் இருந்து குல்லுார்சந்தை செல்வதற்கு குறுக்காக செல்லும் அணையின் நீர்வழித்தடத்திற்கு அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலத்தில் இடப்புறம் சேதம் அடைந்தது. மழையால் சேதம் அதிகமானதுடன், மக்கள் விபத்திலும் சிக்கினர். நீரோட்டம் அதிகரிக்க ரோட்டை கடக்க முயன்றோரை சேதமடைந்த பகுதியை மிதித்து விழுந்தனர்.

தற்போது மீண்டும் வெயில் காலம் துவங்கி விட்டது. நீரோட்டமும் குறைந்து விட்டது. இதனால் தரைப்பாலத்தை சீரமைக்க பொதுப்பணித்துறை நிர்வாகம் விரைந்து பணிகளை துவக்க வேண்டும். இல்லையெனில் கோடை மழை, அடுத்து வரும் வடகிழக்கு பருவமழையில் இன்னும் சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குல்லுார்சந்தை ஊர்மக்கள் விருதுநகர், கலெக்டர் அலுவலகம் வர இது தான் பாதை என்பதால் விரைந்து சரி செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us