/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சிற்றம்பல குருநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
/
திருச்சிற்றம்பல குருநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
திருச்சிற்றம்பல குருநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
திருச்சிற்றம்பல குருநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 15, 2025 03:11 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
நிகழ்ச்சியை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்பு இருந்து மகா கணபதி பூஜை, சுதர்சன ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வேத பாராயணம், காலை யாக சாலை பூஜைகள் என தொடர்ந்து பல்வேறு பூஜைகள் தினமும் நடந்தது.
விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் குருநாத சுவாமி, கன்னி விநாயகர், மகா கணபதி, வள்ளி விநாயகர், இரட்டை விநாயகர், மகா சாஸ்தா, ஆதி நாராயண சுவாமி உட்பட புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கருடாழ்வார் ஆகிய கோபுரங்களுக்கு பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.