ADDED : ஆக 31, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அருகே சித்தம நாயக்கன்பட்டியில் சித்தி விநாயகர், பாலமுருகன் கோயிலின் கும்பாபிஷேக விழா நடந்தது.
சிவாச்சாரியார்கள், பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாக சாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கலசங்களை ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். கோபுரக் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், கிராமத்தினர் செய்தனர்.
