ADDED : நவ 22, 2026 05:26 PM

அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
காலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசநம் பிம்பசுத்தி மூர்த்தி, ரக்ஷா பந்தனம் நான்காம் கால யாக பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 7:00 மணிக்கு கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
