/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
l காவிரி - குண்டாறு கால்வாய் திட்டம் அவசியம்; l விளைச்சல் இன்றி விவசாயிகள் பாதிப்பு
/
l காவிரி - குண்டாறு கால்வாய் திட்டம் அவசியம்; l விளைச்சல் இன்றி விவசாயிகள் பாதிப்பு
l காவிரி - குண்டாறு கால்வாய் திட்டம் அவசியம்; l விளைச்சல் இன்றி விவசாயிகள் பாதிப்பு
l காவிரி - குண்டாறு கால்வாய் திட்டம் அவசியம்; l விளைச்சல் இன்றி விவசாயிகள் பாதிப்பு
ADDED : செப் 23, 2024 05:35 AM
மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய வறட்சியான நரிக்குடி, காரியாபட்டி, திருச்சுழி பகுதிகள் உள்ளன. விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தொழில் வளம் கிடையாது. மழை பொழிவு இருந்தால் மட்டுமே விவசாயம் நடைபெறும். நரிக்குடி பகுதிக்கு நீர் ஆதாரமாக வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதி வழியாக வரும் தண்ணீர் இப்பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு கிடைக்கும்.
கிருதுமால் நதியில் தண்ணீர் வந்துவிடும் என்பது எளிதான விஷயம் அல்ல. பெரிய போராட்டத்திற்கு பின்பு தான் தண்ணீர் திறந்து விடுவர். இது ஒரு புறம் இருக்க, 15 ஆண்டுகளுக்கு மேலாக சரிவர மழை கிடையாது. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசுகளாக உள்ளன. இப்பகுதிக்கு நீர் ஆதாரத்தை ஏற்படுத்தினால் மட்டுமே தொடர்ந்து விவசாயத்தை செய்ய முடியும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து காவிரி - வைகை- கிருதுமால் - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகளை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.
ரூ.14 ஆயிரத்து 200 கோடி தேவைப்பட்டது. இதில் ரூ.7 ஆயிரத்து 100 கோடி நபார்டு வங்கி வழங்குவதாக உத்தரவாதம் அளித்தது. இத்திட்டம் கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை வரை ஒரு பகுதியாகவும், புதுக்கோட்டையில் இருந்து மானாமதுரை வரை 2வது பகுதியாகவும், மானாமதுரையில் இருந்து காரியாபட்டி பி.புதுப்பட்டி வரை 3வது பகுதியாகவும் பிரிக்கப்பட்டது.
முதற்கட்ட பணிகளுக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன. அதற்கு பின் போதிய நிதி ஒதுக்காததால் 2, 3ம் கட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டன. பல்வேறு போராட்டங்களுக்குப் பின் ரூ.290 கோடி நிதி ஒதுக்கி நிலங்களை ஆர்ஜிதம் செய்ய அரசு உத்தரவிட்டது. அதற்கு பின் கால்வாய் வரக்கூடிய பகுதிகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது.
இதுவரை எந்த ஒரு பணிகளும் செய்யப்படவில்லை. இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் தென்பகுதியில் உள்ள 7 மாவட்டங்கள் பயன்பெறும். குடிநீர் பிரச்னை தீரும். விவசாயம் செழிக்கும். கால்நடைகளை வளர்க்க முடியும். தென்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் விவசாயத்தை காக்க முடியும். கடலில் வீணாக கலப்பதை தடுக்க முடியும். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கி விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.