/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: நிதி ஒதுக்கி இணைப்புக்கான பணிகள் துவங்கியதால்

ADDED : டிச 05, 2024 05:27 AM
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு நாளுக்கு நாள் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் பலரும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களுக்கான குடிநீர், ஆய்வகம், கழிப்பறை, குளியலறை என ஒரு நாளைக்கு 4 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
ஆனால் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 18 ஆழ்துளை கிணறுகள் மூலம் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே பெறப்படுகிறது. இதில் மீதமுள்ள 2.5 லட்சம் லிட்டர் தண்ணீரை 24 ஆயிரம் லிட்டர் டேங்க் கொண்ட லாரிகளில் தினமும் 5 தடவை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு மாதத்திற்கு ரூ.4 லட்சம் வரை மருத்துவமனை நிர்வாகம் செலவழிக்கிறது.
இது குறித்து தினமலர் நாளிதழில் ஆக. 19ல் செய்தி வெளியானது. இதையடுத்து மருத்துவமனைக்கு தேவையான குடிநீரை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பெறுவதற்கான பணிகளை டீன் ஜெயசிங் துவக்கினார்.
ஆனால் விருதுநகர் நகராட்சி பகுதிகளுக்கு தேவையான தண்ணீரை சரிவர கொடுக்க முடியாத நிலையில் மருத்துவமனை தேவைக்கான தண்ணீரை வழங்குவதில் சிரமம் இருப்பதாக நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதனால் மருத்துவமனை நிர்வாகத்தின் நிதியில் இருந்து ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கூட்டுக்குடிநீர் திட்டத்தில்இணைப்பதற்கான குழாய் பதிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைந்து முடித்து தண்ணீர் வழங்கப்படவுள்ளது.
மருத்துவமனைக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் போது மீட்டர் பொருத்தி 1 லட்சம் லிட்டருக்கு ரூ. 1500 நகராட்சிக்கு கட்டணமாக செலுத்தப்படும். அப்போது ஒரு மாதத்திற்கு ரூ. 1.15 லட்சம் மட்டுமே தண்ணீருக்காக செலவழிக்கப்படும்.
இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக செலவழிக்கப்பட்ட ரூ. 4 லட்சம் மருத்துவமனைக்கு நிர்வாகத்திற்கு மிச்சமாகும். மேலும் மருத்துவமனையின் தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வும் கிடைக்கும்.