தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கொத்தனார் வெட்டி கொலை: கூலித் தொழிலாளி கைது

கொத்தனார் வெட்டி கொலை: கூலித் தொழிலாளி கைது

கொத்தனார் வெட்டி கொலை: கூலித் தொழிலாளி கைது


UPDATED : ஜூன் 27, 2026 06:55 PM

ADDED : ஜூன் 27, 2026 05:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2026 06:55 PM ADDED : ஜூன் 27, 2026 05:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் முன்பகை காரணமாக புளுகாண்டி ஏசு 23, என்பவரை வெட்டி கொலை செய்த பொன்மாடனை போலீசார் கைது செய்தனர்.

கூமாபட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் புளுகாண்டி ஏசு , கொத்தனார். ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் பொன்மாடன் கூலித் தொழிலாளி.

ஒரு ஆண்டிற்கு முன்பு இருவரிடையே ஏற்பட்ட தகராறில் தாக்கி கொண்டனர். இதனால் முன்பகை இருந்து வந்தது. ஜூன் 26 இரவு 9:00 மணிக்கு நாடார் தெரு முனியப்பன் கோவில் சந்து வழியாக புளுகாண்டி ஏசு வரும்போது, அவரை பொன்மாடன் அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

இதனையடுத்து இரவில் கூமாபட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்தை எஸ்.பி.கவுதம்கோயல், டி.எஸ்.பி. பாலசுந்தரம் பார்வையிட்டனர். கூமாபட்டி போலீசார் பொன்மாடனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us