/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதியின்றி அவதி
/
சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதியின்றி அவதி
ADDED : மார் 16, 2025 06:47 AM
சாத்துார்; சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதியின்றி பயணிகள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில், கோட்டூர் குருசாமி கோயில் ஆகிய பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன.
இதன் காரணமாக செவ்வாய் வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவிலான பக்தர்கள் சாத்துார் வந்து கோயில்களுக்கு செல்கின்றனர். சாத்துார் பஸ் ஸ்டாண்டில் போதுமான இருக்கை வசதிகள் இல்லை. நகராட்சி கழிப்பறை அருகிலும் போலீஸ் செக் போஸ்ட் அருகிலும் தலா இரண்டு சிமெண்ட் இருக்கைகள் மட்டுமே உள்ளன.
இந்த இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து கொள்வது போக பலர் நின்று கொண்டே பஸ்சுக்காக காத்து நிற்கும் நிலை உள்ளது.
நீண்ட துாரத்தில் இருந்து பஸ்ஸில் பயணம் செய்து வரும் பயணிகள் பஸ் ஸ்டாண்டில் சிறிது நேரம் உட்கார்ந்து ஓய்வெடுக்க வசதியாக கூடுதலான இருக்கைகள் இல்லாத நிலையில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக மூட்டு வலி உள்ள முதியவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் உடனடியாக பஸ் ஏறி தங்கள் ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
நகராட்சி நிர்வாகம் ஆங்காங்கே தற்காலிகமான ஸ்டீல் சேர்களை அமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.