/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மோட்டார் பழுதடைந்து மூன்று மாதமாகியும் சரிசெய்யாததால் தண்ணீர் பற்றாக்குறை

ADDED : செப் 19, 2024 04:22 AM
சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் சத்யா நகரில் மோட்டார் பழுதால் 3 மாதமாக புழக்கத்திற்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் சத்யா நகரில் போர்வெல் மூலமாக புழக்கத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மோட்டார் மூன்று மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது. மோட்டாரை சரி செய்வதற்காக கழட்டி எடுத்துச் சென்ற நிலையில் இதுவரையிலும் சரி செய்யவில்லை.
இதனால் அப்பகுதியினர் புழக்கத்திற்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் இரு வாரத்திற்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படும் குடிநீர் போதாத நிலையில் புழக்கத்திற்கான தண்ணீரை வைத்து மக்கள் சமாளித்து வந்தனர்.
தற்போது இந்த தண்ணீரும் வராததால் இப்பகுதி மக்கள் குளிக்க, துணி துவைக்க என அனைத்து தேவைகளுக்கும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
கூலி வேலை செய்யும் இப்பகுதி மக்கள் தினமும் தண்ணீரை விலைக்கு வாங்குவதில் சிரமப்படுகின்றனர்.
எனவே உடனடியாக மோட்டாரை சரி செய்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.