ADDED : பிப் 10, 2026 06:13 AM

அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை டிரஸ்ட்டிற்கு பாத்தியப்பட்ட சந்திவீர சாமி கோயிலில் களரி பொங்கல் விழா நடந்தது. பங்குனி பொங்கல் பண்டிகையின் தொடக்க விழாவான சந்தி வீரசாமி கோயிலில் பொங்கல் விழா நடந்தது.
சாமிக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் நடந்த 1008 குத்து விளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டனர். விழாவில் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலைவர் சுதாகர், எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைவர் காசிமுருகன் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
