/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிலம் மோசடி: சார்பதிவாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு
/
நிலம் மோசடி: சார்பதிவாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு
நிலம் மோசடி: சார்பதிவாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு
நிலம் மோசடி: சார்பதிவாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு
ADDED : செப் 06, 2025 04:51 AM
சாத்துார்: சாத்துார் பெத்து ரெட்டிபட்டியை சேர்ந்தவர் வினோபாஜி, 55. இவரது நிலத்தை மோசடியாக சிலர் விற்க முயல்வதாக அதே ஊரைச் சேர்ந்த உறவினர்கள் ராஜேந்திரன், போத்திராஜ், வேலுச்சாமி, கலைச்செல்வி, சுப்புத்தாய், சத்திரப்பட்டி சங்கர், ஆகியோர் கூறியுள்ளனர்.
இதனால் வினோபாஜி அவர்கள் கூறியபடி ஜூலை 30ல் சத்திரப்பட்டி சங்கர் பேரில் பவர் பத் திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.அன்றைய தினமே அவர் கோவில்பட்டியைச் சேர்ந்த கணேஷ் குமார், ரமேஷ் ஆகியோருக்கு நிலத்தை விற்றுள்ளார்.
நிலம் விற்ற பணத்தையும் சங்கர் தரவில்லை. ஆசை வார்த்தை கூறி நிலத்தை மோசடி செய்தவர்கள் மீதும் முறையாக விசாரிக்காமல் நிலத்தை பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் வினோபாஜி புகார் செய்துள்ளார்.
சாத்துார் தாலுகா போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக் கின்றனர்.