/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பில் மண் கொள்ளை தொடருது; கண்டுகொள்ளாத அதிகாரிகளால் இயற்கைவளம் அழிப்பு

UPDATED : ஏப் 20, 2025 08:04 AM
ADDED : ஏப் 20, 2025 04:06 AM

ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதிகளிலும் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ள நிலையில் மண் தேவை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு கண்மாய்களில் மண் அள்ள அரசு அனுமதி அளித்த நிலையில், ஆளும் கட்சியினர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளிலும், கன்மாய்களிலும் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட மிகவும் அதிகமாக இரவு பகலாக மண்ணும், நீர் ஆதாரப் பகுதிகளில் மணலும் அள்ளப்பட்டது.
இதனால் உண்மையாக செங்கல் சூளை தொழில் செய்பவர்களுக்கு மண் கிடைக்காத நிலை ஏற்பட்டது. மேலும் விவசாய நிலங்களிலும் மண்கள் அள்ளப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
தற்போதும் யாருக்கும் மண் அள்ள அனுமதி கொடுக்காத நிலையில் ஆளும் கட்சியினரின் ஆசியுடன் ஸ்ரீவில்லிபுத்துாரில் மம்சாபுரம், செண்பகத்தோப்பு, திருவண்ணாமலை பகுதிகளிலும், வத்திராயிருப்பில் கோட்டையூர், தம்பிபட்டி, மகாராஜபுரம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் தனியார் நிலங்களிலும், அரசு நிலங்களிலும் அதிகளவில் மண் கொள்ளை இரவு பகலாக நடந்து வருகிறது. இதில் பல விவசாயிகளின் விளை நிலங்கள் வழியாக மண் கொள்ளை வாகனங்கள் செல்வதால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகளும் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனை மாவட்ட நிர்வாகம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதி, விளைநிலங்களில் மண், மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்.