ADDED : ஜூலை 04, 2025 02:49 AM

ராஜபாளையம்:ராஜபாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் அய்யப்பன், மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி, கிளை தலைவர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.
ராஜபாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடை பெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். வழிகாட்டி மதிப்பை விட 30 சதவீதம் கூடுதலாக வசூல் செய்வதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சார் பதிவாளர் அலுவலகத்தில் அரசு அனுமதியின்றி விதிமீறி செயல்படும் ராம்ராஜ், அர்ஜூனன் இருவரையும் வெளியேற்ற வேண்டும், சார் பதிவாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.