/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாமதமாக வந்த பக்தர்கள் சதுரகிரியில் அனுமதி மறுப்பு
/
தாமதமாக வந்த பக்தர்கள் சதுரகிரியில் அனுமதி மறுப்பு
தாமதமாக வந்த பக்தர்கள் சதுரகிரியில் அனுமதி மறுப்பு
தாமதமாக வந்த பக்தர்கள் சதுரகிரியில் அனுமதி மறுப்பு
ADDED : ஜூலை 24, 2025 05:36 AM
வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், மதியம் 2:00 மணிக்கு மேல் சுமார் 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு மலையேற வந்தனர்.
ஆனால், நீதிமன்ற உத்தரவின் காரணமாக வனத்துறையினர் அவர்களை மலையேற அனுமதி மறுத்தனர்.
இதனால் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், வனத் துறையினர் அனுமதிக்க மறுத்ததால் சிறிது நேரம் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதற்கிடையே நேற்று மதியம் கர்நாடக மாநில கலெக்டர் ராம்பிரசாத் மனோகர் சுவாமி தரிசனம் செய்தார். மாலையில் மதுரை கலெக்டர் பிரவீன் குமார், விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா, எஸ்.பி. கண்ணன் ஆகியோர் தாணிப்பாறை மலையடி வாரத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்தனர்.