/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டூவீலர் மீது கார் மோதி வக்கீல் பலி
/
டூவீலர் மீது கார் மோதி வக்கீல் பலி
ADDED : ஆக 07, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி அருகே டூவீலர் மீது கார் மோதியதில் வக்கீல் குட்டி ஜெகன் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் பலியானார்.
காரியாபட்டி கம்பிக்குடியைச் சேர்ந்த வக்கீல் குட்டிஜெகன் 40. காரியாபட்டியில் உள்ள கோர்ட்டுக்கு சென்று விட்டு நேற்றிரவு 8:45 மணிக்கு டூவீலரில் வீடு திரும்பினார். ஹெல்மெட் அணியவில்லை.
மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையில் கம்பிக்குடி விலக்கில் திரும்பியபோது, மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு குடும்பத்தினருடன் அருள்தாஸ் 66, ஓட்டி சென்ற கார் டூவீலரில் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே குட்டி ஜெகன் பலியானார். ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.