UPDATED : ஆக 19, 2026 04:59 PM
ADDED : ஆக 19, 2026 04:53 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் இடப்பிரச்னையில் பெண் வழக்கறிஞர் விஜயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பொய் வழக்கு பதிவு செய்து அதனை அவர்களிடம் தெரிவிக்காத மல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், எஸ்.ஐ. ரகுபதி, எஸ்.பி.ஏட்டு ஜெயக்குமார் ஆகியோரை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நேற்று மதியம் 12:40 மணிக்கு வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் பஸ் மறியல் போராட்டம் நடந்தது. சங்க தலைவர் ராஜையா, செயலாளர் ஜெயராஜ் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
