/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் ஊழியர்களுக்கு விடுப்பு எதிர்பார்ப்பு
/
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் ஊழியர்களுக்கு விடுப்பு எதிர்பார்ப்பு
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் ஊழியர்களுக்கு விடுப்பு எதிர்பார்ப்பு
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் ஊழியர்களுக்கு விடுப்பு எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 02, 2025 12:28 AM
விருதுநகர்: அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் ஆன்சைட் பொறியாளர், வார்டு மேலாளர், ஆய்வக நுட்பனர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிகின்றனர்.
இவர்களில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளருக்கு ரூ. 8500 மாத ஊதியமும், மற்ற பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு ரூ. 12 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஞாயிறு விடுமுறை உண்டு. ஆனால் மருத்துவ விடுப்பு வழங்கப்படுவதில்லை.
இதனால் உடல்நிலை சரியில்லாமல் போனாலும் விடுப்பு எடுத்தால் ஊதிய பிடித்தம் செய்யப்படும் என்பதால் பலரும் சிரமத்துடன் பணி செய்ய வேண்டிய நிலையே தொடர்கிறது. கர்ப்பிணிகளுக்கு வழங்க வேண்டிய மகப்பேறு விடுப்பு இல்லை என்பதால் வேலையை விட்டு நீங்கி கொண்டு மீண்டும் பணிக்கு புதிதாக விண்ணப்பித்து வர வேண்டிய நிலையே தொடர்கிறது.
எனவே முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.