நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் முதுநிலை இயற்பியல் ஆராய்ச்சி துறை சார்பில் ஆராய்ச்சி கட்டுரை எழுதுவதற்கான செயற்கை நுண்ணறிவு கருவிகள் என்ற தலைப்பில் முன்னாள் மாணவர் விருந்தினர் விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
மாணவி அபிநயா வரவேற்று சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் முதன்மை உரை ஆற்றினார்.
இயற்பியல் துறை தலைவர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். கோயம்புத்துார் கற்பகம் உயர் கல்வி அகாடமி துணை பேராசிரியர் பிரேமலதா பேசினார்.மாணவி சத்யலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி ஸ்ரீ பூமா நன்றி கூறினார்.