ADDED : ஜூலை 12, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, விருதுநகர் வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து கேலிவதை சட்டம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாமை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் இடையே நடத்தியது.
சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் நீதிபதி செல்வி தனம் தலைமை வகித்து பேசியதாவது:
ராகிங் என்பது மாணவர்களிடையே இருக்க கூடாது. எப்போதும் நண்பர்களாக இருக்க வேண்டும். மீறி ராகிங் நடந்தால் துணிச்சலுடன் புகார் தெரிவிக்க வேண்டும் என்றார்.
டி.எஸ்.பி., யோகேஸ்வரன், கல்லுாரி துணை முதல்வர் ரேகா, வழக்கறிஞர் அருண் செண்பகமணி, மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.