ADDED : ஏப் 26, 2026 11:34 PM
ராஜபாளையம்: கோடை வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சை விலை ரூ. 250 வரை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் பழம் ஒன்று ரூ.20 வரை விற்பனையாகிறது.
வெயில் காரணமாக உடல் சூட்டை தணிக்க சர்பத் உள்ளிட்ட நீர் பானங்களை மக்கள் நாடுவதால் இதன் தேவை அதிகம். தற்போது பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ராஜபாளையம் சந்தையில் எலுமிச்சை விலை ரூ.250 முதல் 280 வரை விற்பனை ஆகிறது.
பிப். ல் ரூ.60 விற்பனை ஆன நிலையில் தற்போது திருவிழா கோடையின் தாக்கத்தால் தேவை அதிகரித்துள்ளதால் இதன் விலை உச்சம் தொட்டுள்ளது. பொதுவாக அருகில் உள்ள புளியங்குடி, மதுரை மார்க்கெட்டில் இருந்து பழங்கள் வரத்து இருப்பினும் ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம், மாங்குடி பகுதிகளில் குறிப்பிட்ட அளவு சாகுபடி நடைபெறுகிறது.
இது குறித்து விவசாயி கணேசன்: இந்த முறை குறிப்பிட்ட அளவு கோடை மழை பெய்யாததால் மார்க்கெட்டில் எலுமிச்சை வரத்து சரிந்துள்ளது. கோயில் திருவிழா காலம் என்பதால் பழத்தைப் பொறுத்து ரூ.20 வரை விற்பனையாகிறது. வரத்து குறைவு ஏற்பட்டால் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
