/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்மாய் காப்போம் சேதமான கரைகள், மடைகள், துார்ந்த வாய்கால்கள்; வேதனையில் வலையங்குளம் கண்மாய் விவசாயிகள்
/
கண்மாய் காப்போம் சேதமான கரைகள், மடைகள், துார்ந்த வாய்கால்கள்; வேதனையில் வலையங்குளம் கண்மாய் விவசாயிகள்
கண்மாய் காப்போம் சேதமான கரைகள், மடைகள், துார்ந்த வாய்கால்கள்; வேதனையில் வலையங்குளம் கண்மாய் விவசாயிகள்
கண்மாய் காப்போம் சேதமான கரைகள், மடைகள், துார்ந்த வாய்கால்கள்; வேதனையில் வலையங்குளம் கண்மாய் விவசாயிகள்
UPDATED : ஜூலை 24, 2025 07:51 AM
ADDED : ஜூலை 24, 2025 06:40 AM

காரியாபட்டி: சேதமடைந்த கரைகள், மடைகள், துார்ந்த கால்வாய்கள், கருவேல முட்செடிகள் ஆக்கிரமிப்பு போன்றவற்றால் மழை பெய்தும் நீரை தேக்க முடியாமல் காரியாபட்டி வலையங்குளம் கண்மாய் விவசாயிகள் வேதனையடைந் துள்ளனர்.
காரியாபட்டி வலையங்குளத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கண்மாய் 72 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 2 மடைகள் உள்ளன. 150 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெறும்.
ஒருமுறை கண்மாய் நிறைந்தால் போதும், இரு போகும் நெல் விவசாயம் செய்வர். நீர் ஆதாரமாக காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீர், வரத்து ஓடைகள் வழியாக கண்மாய்க்கு வந்து சேரும். மேலும் சென்னம்பட்டி கால்வாய் திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
கண்மாய் நிறைந்து உபரி நீர் வரத்து கால்வாய் வழியாக தோணுகால் கண்மாய்க்கு செல்லும்.
இந்நிலையில் கண்மாய் தூர்வாரி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகின. சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, கரை சேதமடைந்தது, மடைகள் உடைந்து இருக்கும் இடமே தெரியாமல் கிடக்கிறது.
கால்வாய்கள் தூர்ந்து போயின. 3 ஆண்டு களுக்கு முன் நல்ல மழை பெய்து கண்மாய் நிறைந்தும் பயன்பாடு இன்றி போனது. தற்போது தண்ணீரை தேங்குவதற்கு வாய்ப்பு இல்லாமல் வீணாக வெளியேறி வருகிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு குடிநீர் பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. விளை நிலங்கள் தரிசு நிலங்களாக கிடக்கின்றன. விளைந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் விவசாயம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
கண்மாயை தூர்வாரி, மடைகளை சீரமைத்து, கால்வாய்களை கட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தண்ணீரை தேக்க முடியவில்லை தங்கப்பாண்டி, விவசாயி: கண்மாய் நிறைந்து இரு போகம் விளையும்.
தற்போது தரிசு நிலங்களாக சீமை கருவேல மரங்கள் வளர்ந்து வயல்கள் இருக்கும் இடமே தெரியாமல் கிடக்கின்றன. விளைந்து 25 ஆண்டு களுக்கு மேல் ஆகின.
மடைகள், கால்வாய்கள் சேதம் அடைந்தன. தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாக வெளியேறி வருகிறது.
3 ஆண்டுகளுக்கு முன் கண்மாய் நிறைந்தும் கால்வாய்கள், மடைகள் சரிவர இல்லாததால் விவசாயம் செய்ய முடியவில்லை.
தூர்வார வேண்டும் செல்வராஜ், விவசாயி: வரத்து ஓடைகள், கண்மாய் தூர் வாராமல் கிடக்கின்றன. சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கிடக்கின்றன. கரை சேதமாகி வருகிறது.
விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. வரத்துக் கால்வாய், கண்மாயை தூர் வாரி, மடைகளை சீரமைக்க வேண்டும்.
பலமுறை தூர்வார வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. விவசாயத்தை தொடர தூர்வார வேண்டும்.
மாயமான வரத்துக்கால்வாய் பிரின்ஸ், விவசாயி: வலையங்குளம் கண்மாய் நிரம்பி வரத்து கால்வாய் வழியாக மற்ற கண்மாய்களுக்கு செல்லும். தற்போது வரத்து கால்வாய் தூர்ந்து போனதால் உபரி நீர் செல்ல வழி இல்லை.
அதேபோல் காட்டுப் பகுதியில் இருந்து வரும் மழைநீர் வரத்து ஓடைகளும் காணாமல் போயின. நீர் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால் மற்ற கண்மாய்கள் பாதிக்கப்படு கின்றன.
வரத்து ஓடைகளை கண்டும் காணாமல் விட்டுவிட்டதால் புதர் மண்டி கிடக்கின்றன. மற்ற கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்ல அனைத்து ஓடைகளையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

