தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கண்மாய் காப்போம்

கண்மாய் காப்போம்

கண்மாய் காப்போம்


ADDED : ஆக 19, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 04:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துார்வாரதது, சேதமான கால்வாய், கழுங்கு சுவர்

*வேதனையில் சீமைக்கருவேல செடிகள்

சாத்துார், ஆக. 20-

கரைகளில் சீமைக்கருவேல செடிகள் ஆக்கிரமிப்பு, துார்வாராததால் மண் மேவியது, சேதமடைந்த கால்வாய், கழுங்கு சுவர்கள் உட்பட பல பிரச்சனைகளை தண்ணீரை தேக்க முடியாத நிலை உள்ளதால் வெம்பக்கோட்டை கண்மாய் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

வெம்பக்கோட்டையில் கடும் கோடை வெயிலால் கடந்த ஆண்டு நிரம்பி வழிந்த கண்மாய் தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது. மழைக்காலத்திற்கு முன்பாக கண்மாயை துார்வாரவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெம்பக்கோட்டை கண்மாய் மூலம் வெம்பக்கோட்டை, கோமாளி பட்டி, விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன.

300 ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. 2020ல் குடிமராமத்து பணி நடந்தது. கண்மாய் முழுமையாக துார்வாரப்பட்டது. இதன் பின்னர் பராமரிப்பு பணி ஏதும் நடைபெறவில்லை.

தற்போது கண்மாயின் கரை பகுதி முழுவதிலும் சீமைகருவேலமுள் செடி காடு போல வளர்ந்து உள்ளது.நீர் ததும்பி வெளியேறும் கழுங்கு பகுதியில் சுவர்கள் சேதம் அடைந்தும் மண் மேவிய நிலையிலும் காணப்படுகிறது.

கண்மாயின் பாசன கால்வாய் முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

நீர் நிலைகளில் உள்ள முள் செடிகளை அகற்றிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் கண்மாயில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்றுவதற்கு தன்னார்வலர்களும் அரசும் முன்வர வேண்டும்.

தற்போது மழைக்காலம் துவங்காத நிலையில் முன்னேற்பாடாக கண்மாயை துார்வாரவும் முள் செடியை அகற்றவும் செய்தால் தண்ணீர் தேங்கி விவசாயம் செழிப்பதோடு நிலத்தடி நீரும் உயரும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கண்மாய் இருப்பதே தெரியவில்லை

முள் செடி கரைப்பகுதி முழுவதும் வளர்ந்து இருப்பதோடு கண்மாயின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் முளைத்திருப்பதால் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் இவை முள்செடிகள்

உறிஞ்சி விடுகின்றன.முள் செடியை அகற்றி கண்மாயை துார்வார வேண்டும். பல கிராமங்களின் நிலத்தடி நீராதாரமாக இந்த கண்மாய் இருப்பதால் இதனை அதிகாரிகள் பராமரிக்க வேண்டும்.

அழகு மருது, விவசாயி

பாசன கால்வாய் சீரமைக்கணும்

வெம்பக்கோட்டை கண்மாய் நிரம்பினால் 5 கிராமங்கள் பயன்பெறும்.விஜய கரிசல் குளம் பாண்டியன் கண்மாய்க்கும் இங்கிருந்தே தண்ணீர் செல்கிறது. பாசன கால்வாய் முழுவதும் சேதமடைந்து விட்டது.முள் செடி அதிக அளவில் முளைத்து உள்ளதால் மதகுப் பகுதிக்கு செல்ல முடியவில்லை.மதகுப் பகுதிக்கு செல்ல வழி ஏற்படுத்தி பாசன கால்வாயை சீரமைக்க வேண்டும்.

சங்கர், விவசாயி.

துார்வார நடவடிக்கை தேவை

கண்மாயில் மண் மேவி காணப்படுகிறது. நீர் வரத்து பாதைகளில் அதிக அளவில் மண் மேவி உள்ளதால் பலத்த மழை பெய்து தண்ணீர் வரும்போது காட்டுப் பகுதிக்குள் சென்று வீணாகி வருகிறது. கண்மாய்க்கு தண்ணீர் வருவதில்லை . நீர்வரத்து ஓடைகளையும் கண் மாயையும் துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன் மூலம் இந்த பகுதியில் விவசாயம் செழிக்கும்.

ராஜகுரு, விவசாயி.

(சார், படங்கள் தனி தனி பைலாக அனுப்புகிறேன்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us