/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சரக்கு வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் தடுக்கலாமே; மீறுவோர் மீது மிருகவதை தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை
/
சரக்கு வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் தடுக்கலாமே; மீறுவோர் மீது மிருகவதை தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை
சரக்கு வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் தடுக்கலாமே; மீறுவோர் மீது மிருகவதை தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை
சரக்கு வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் தடுக்கலாமே; மீறுவோர் மீது மிருகவதை தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை
ADDED : அக் 27, 2025 04:12 AM

மாவட்டத்தில் அதிக அளவில் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. விவசாயம் கை கொடுக்காத சமயங்களில் கால்நடைகள் கை கொடுக்கின்றன.
இவற்றை அவ்வப்போது விற்பனை செய்து தங்களது குடும்ப தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்ய உதவியாக இருக்கிறது. வியாபாரிகள் மொத்தமாக விலைக்கு வாங்கி, கேரளா, கர்நாடகா, மற்ற மாநிலங்களுக்கு வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போது அரசு நிர்ணயிக்கப்பட்ட விலங்குவதை தடுப்புச் சட்ட விதிகளை கால்நடை வளர்ப்போர், சந்தைப்படுத்துவோர், விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டும். அத்துடன் கோழி, ஆடு, மாடு ஆகியவற்றிற்கு கால்நடை மருத்துவர் சான்றிதழ் பெற வேண்டும்.
எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை வாகனங்களில் ஒட்ட வேண்டும். மினி வேன்களில் 2 மாடுகள், லாரிகளில் 8 மாடுகள் வரை ஏற்றலாம்.
அதற்கு உரிய கம்பு தடுப்புகள், தீவன வசதிகள் செய்திருக்க வேண்டும். அதேபோல் ஆடுகளை மினி வேன்களில் 10ம், லாரிகளில் 40 வரை கொண்டு செல்லலாம். விதி மீறி மினி வேன்களில் 5ம், லாரிகளில் 15 மாடுகளை ஏற்றி செல்கின்றனர். கோழிகளை டூவீலர்களில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கொண்டு செல்வது குற்றமாகும். கூண்டில் காற்றோட்டத்துடன் வைத்து கொண்டு செல்ல வேண்டும்.
வாகனங்களில் கொண்டு செல்லும்போது மிதமான வேகத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
அதிக காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கால்நடைகள் இறக்க நேரிடும். வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போது மொத்தமாக அடைத்து வைத்து, அசைய முடியாத அளவிற்கு நெருக்கடிக்குள் கொண்டு செல்கின்றனர். தீவனங்கள் வைப்பது கிடையாது. வாகனங்களை அதி வேகத்துடன் இயக்குவது என அரசு விதிமுறைகளை பின்பற்றுவது கிடையாது. வளைவுகளில் செல்லும்போது கால்நடைகள் திண்டாடுகின்றன.
இது தொடர்கதையாக நடந்து வருகிறது. கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்களை, அதிகாரிகளும் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். கண்காணித்து தடுக்க நடவடிக்கை வேண்டும். விலங்கின வதை தடுப்புச் சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிப்பதுடன், கால்நடை போக்குவரத்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

